கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
தீ விபத்திலிருந்து தப்பிக்க “ நில்! விழு! உருள்!
விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்! என்பது நிலநடுக்க தயார் நிலை
“கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக்கொள்ளவும்.
கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.
அவசர மருத்துவக் குழு
காவலர்கள்
காப்பீட்டு முகவர்கள்
தீயணைப்புப் படையினர்
‘விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்! என்பது எதற்கான ஒத்திகை?
சுனாமி
நிலநடுக்கம்
கலவரம்
தீ
தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர்கொள்வதோடு தொடர்புடையது?
“கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.
“கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேண்டாம்.
“கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
“காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.