x = a tan θ மற்றும் y = b sec θ எனில் ________
ஒரு மின் கம்பமானது அதன் அடியில் சமதளப் பரப்பில் உள்ள ஒரு புள்ளியில் 30° கோணத்தை ஏற்படுத்துகிறது. முதல் புள்ளிக்கு 'b' மீ உயரத்தில் உள்ள இரண்டாவது புள்ளியிலிருந்து மின்கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் 60° எனில் மின் கம்பத்தின் உயரமானது _______
( 1+ tan θ + sec θ) (1 + cot θ - cosec θ) - ன் மதிப்பு _______
ஒரு கோபுரத்தின் உயரம் 60 மீ ஆகும். சூரியனை காணும் ஏற்றக்கோணம் 30° - யிலிருந்து 45° ஆக உயரும் போது கோபுரத்தின் நிழலானது x - மீ குறைகிறது எனில், x - ன் மதிப்பு _______
sin θ + cos θ = a மற்றும் sec θ + cosec θ = b எனில், b(a² - 1) - ன் மதிப்பு _______
5x = sec θ மற்றும் 5/x = tan θ எனில், x² - 1 / x² - ன் மதிப்பு _______
sin θ = cos θ எனில், 2 tan² θ + sin ² θ - 1 ன் மதிப்பு _______
பல அடுக்குக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து 20 மீ உயரமுள்ள கட்டிடத்தின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30° மற்றும் 60° எனில் பல அடுக்குக் கட்டிடத்தின் உயரம் மற்றும் இரு கட்டிடங்களுக்கு இடையேயுள்ள தொலைவானது (மீட்டரில்) ________
sin²θ + 1 / 1+tan²θ - ன் மதிப்பு _______
இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும். முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக் கோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்) காண்க.
ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம் β. மேக பிம்பத்தின் இறக்கக் கோணம் 45° எனில், ஏரியில் இருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது ________
tan θ cosec²θ - tan θ - ன் மதிப்பு _______
a cot θ + b cosec θ = p மற்றும் b cot θ + a cosec θ = q எனில், p² - q² - ன் மதிப்பு ______
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் √3:1, எனில் சூரியனைக் காணும் ஏற்றக் கோண அளவானது ______
(sin α + cosec α)² + (cos α + sec α)² = k + tan² α + cot²α, எனில் k - யின் மதிப்பு ________